விழுப்புரம்

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

DIN

உளுந்தூர்பேட்டை ஸ்ரீஇராமகிருஷ்ண வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியில் அண்மையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
அறிவியல் முன்னேற்றம், பாரத நாட்டின் பெருமைகள், ஆரோக்கியமான உணவு, கணித வாழ்வியல் போன்ற தலைப்புகளில் நடைபெற்ற கண்காட்சியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் எம்.கதிர் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினார். பள்ளித் தாளாளர் யதீஸ்வரி ஆத்ம விகாஸப்ரியா அம்பா தலைமை வகித்து, ஆசியுரை வழங்கினார்.
நிழ்ச்சியின் தொடக்கத்தில் தூய்மையின் நலனைப் பற்றியும், நமது பண்பாடு, பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையிலும் மாணவிகள் பாடல்கள் பாடினர். 
மேலும், வேளாண்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், மாணவிகள் சிறப்பு நடனம் ஆடினர். கண்காட்சியை மாணவர்கள், பெற்றோர்கள், சந்நியாச சகோதரிகள் உள்பட பலர் பார்வையிட்டனர். 
இதில், துணை முதல்வர் சுஜாதா, மேலாளர் லோகேஸ்வரி மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT