விழுப்புரம்

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு

DIN


கள்ளக்குறிச்சி நகரில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பிரசாரம் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் இரா.ராமநாதன் தலைமை வகித்தார். 
அப்போது அவர் பேசுகையில், கள்ளக்குறிச்சி நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். ஆட்டோக்களுக்கான ஆவணங்கள் சரியாக வைத்திருக்க வேண்டும். வாகனத்தை கவனமாக இயக்க வேண்டும். 
அதிக வேகத்தில் சென்று பெரிய வாகனங்களை முந்திச் செல்லக்கூடாது. சாலை விதிகளை பின்பற்ற வேண்டும்.
 மது போதையில் வாகனத்தை இயக்கக் கூடாது என்பன போன்ற அறிவுரைகளை வழங்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர்கள் தங்க.விஜயக்குமார், சீ.ரேவதி,  கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் ப.சத்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT