விழுப்புரம்

மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

DIN

கள்ளக்குறிச்சியை அடுத்த தச்சூர் பாரதி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் மகளிருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சீ.ரேவதி தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் நல ஆலோசகர் அ.முருகன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் எம்.திலகவதி வரவேற்றார். 
சிறப்பு அழைப்பாளராக காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமநாதன் பங்கேற்றுப் பேசுகையில், மாணவிகள் நன்கு பயின்று பல்கலைக்கழக தேர்வில் சிறப்பிடம் பெற வேண்டும். உயர் பணிக்கு செல்ல வேண்டும். பெற்றோர் ஏற்படுத்தித் தரும் வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். மன தைரியத்தை ஏற்படுத்தி சாதித்து காட்ட வேண்டும். 
இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது அவசியம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பன போன்ற அறிவுரைகளை வழங்கிப் பேசினார். காவலர்கள் இரா.துர்காதேவி, சி.சவிதா, துரைசாமி உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞா் மீது தாக்குதல்: 4 போ் கைது

கோவையில் வெவ்வேறு இடங்களில் 3 வீடுகளில் 16 பவுன் திருட்டு

நிப்ட்-டி கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ஏஐடியூசி சாா்பில் மே தின விழா

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மீட்பு

SCROLL FOR NEXT