விழுப்புரம்

பொங்கல் விழா பாதுகாப்பு: போலீஸார் விழிப்புணர்வு பிரசாரம்

DIN


விழுப்புரத்தில் பாதுகாப்புடன் பொங்கல் விழாவைக் கொண்டாட வேண்டும் என்று அந்தந்த காவல் நிலைய போலீஸார் சுற்றுப்புற கிராமங்களில் சனிக்கிழமை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். 
விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் சார்பில், உதவி ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் ஆட்டோ மூலம் ஒலிபெருக்கி வைத்து போலீஸார் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். 
ஜானகிபுரம், கொளத்தூர், கண்டமானடி, சாலாமேடு, காவணிப்பாக்கம், தளவானூர், அரியலூர் உள்ளிட்ட கிராமங்களில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, தகராறு ஏற்படும் சூழல் இருந்தால் உடனடியாக காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 
இதேபோல, வளவனூர், காணை காவல் நிலையங்களுக்கு உள்பட்ட காணை, பெரும்பாக்கம், வளவனூர், கோலியனூர், வாணியம்பாளையம், பஞ்சமாதேவி உள்ளிட்ட கிராமங்களிலும், அந்தந்த காவல் நிலைய போலீஸார் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT