விழுப்புரம்

அஞ்சாஞ்சேரியில் கபடிப் போட்டி

DIN

செஞ்சியை அடுத்துள்ள அஞ்சாஞ்சேரி கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, இளைஞர்களுக்கான கபடி விளையாட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
முதலாமாண்டு தொடக்க விழாவுக்கு தொழில் அதிபர் அஞ்சாஞ்சேரி கணேசன் தலைமை வகித்து, விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கிவைத்தார். போட்டியில் அஞ்சாஞ்சேரி, பொன்பத்தி, செஞ்சி பெரியகரம், செஞ்சி எம்ஜிஆர் நகர், மேல்எடையாளம், ஜெயங்கொண்டான், குறிஞ்சிபை ஆகிய ஊர்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இதில், செஞ்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த இளைஞர்கள் குழு முதலிடமும், செஞ்சி பெரியகரத்தைச் சேர்ந்த இளைஞர் குழு இரண்டாம் இடமும் பிடித்து வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற கபடி குழுவினருக்கு கடலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பார்த்திபன், முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2,500-ம், சுழல் கோப்பைகளையும் வழங்கி, குழுவினரை பாராட்டிப் பேசினார். விழாவில், வழக்குரைஞர் க.கிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை 
அஞ்சாஞ்சேரி இளைஞர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT