விழுப்புரம்

திண்டிவனம் அருகே பேருந்து மீது வேன் மோதல்: ராஜஸ்தான் பயணி சாவு

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வியாழக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து மீது வேன் மோதியதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்.
சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு புதன்கிழமை நள்ளிரவு அரசுப் பேருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரைச் சேர்ந்த ஐயப்பன் (36) பேருந்தை ஓட்டினார்.
திண்டிவனம் அருகே சலவாதி பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை நெடுஞ்சாலையிலிருந்து புறவழிச் சாலைக்கு பேருந்து திரும்பிய போது, கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்குச் சென்ற ராஜஸ்தான் மாநில சுற்றுலாப் பயணிகளின் வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அரசுப் பேருந்து மீது மோதியது.
இதில், பேருந்து கவிழ்ந்தது. வேனின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. வேனில் பயணித்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜிஜேந்திர கிராடு (49) பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும், வேன் ஓட்டுநரான சென்னை புரசைவாக்கத்தைச் சேரந்த ஏழுமலை மகன் பிரகாஷ் (26) உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
பேருந்தில் பயணித்த சென்னையைச் சேர்ந்த குமார் (42), குமார் மனைவி செல்வி (38), வினோத் மகன் தேவாஸ் (16), சஞ்சனியாஸ் (34), கிருஷ்ண வியாஸ் (46), ரியாபாய் (18), செங்கத்தைச் சேர்ந்த கதிவரன் (26) உள்பட 16 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த ரோசணை போலீஸார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து ரோசணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT