விழுப்புரம்

சிஐடியூ ஆர்ப்பாட்டம்

DIN

டாஸ்மாக் நிர்வாகத்தைக் கண்டித்து, விழுப்புரத்தில் சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தனசேகரன் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட செயலர் எஸ்.முத்துக்குமரன், மாவட்டத் தலைவர் ஆர்.மூர்த்தி, டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஆர்.கணபதி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
 விழுப்புரம் மாவட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்கள் பணியிட மாறுதலில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும், சாதாரண காரணங்களுக்காக, டாஸ்மாக் மதுக் கடைகளை மூடிவரும் மாவட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 விதிகளை மீறி மதுக் கடைகளை மூடுவதை கைவிட வேண்டும், மாவட்ட மேலாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
 விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்பட்டதால், அதில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு, மாற்றுக் கடைகளில் வேலை வழங்க வேண்டும், அரசின் இளநிலை உதவியாளர் பணி நியமனத்தில், 50 சதவீத பணியிடங்களை டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

SCROLL FOR NEXT