விழுப்புரம்

கிணற்றுக்குள் தவறி விழுந்த மான் மீட்பு

DIN


திண்டிவனம் அருகே விவசாயக் கிணற்றுக்குள் தவறி விழுந்த மானை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
திண்டிவனம் வட்டம், சித்தணி அருகே உள்ள ஏழாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனியப்பன். அந்தக் கிராமத்திலுள்ள இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 50 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது.
இந்த கிணற்றுக்குள் சனிக்கிழமை அந்தப் பகுதியில் தண்ணீர் தேடி வந்த மான் ஒன்று விழுந்து, தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்தது. இதையறிந்த கிராம மக்கள், திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில், நிலைய அலுவலர் சந்தானகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள்,  விரைந்து சென்று கிணற்றில் தத்தளித்துக்கொண்டிருந்த மானை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். பின்னர், அந்த மான் விழுப்புரம் வன அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, வனத் துறையினர் அந்த மானை வேட்டவலம் காப்புக்காட்டுக்கு கொண்டு சென்று விட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT