விழுப்புரம்

போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி, போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் சார்பில் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்  அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தொமுச பொதுச் செயலர் பிரபா இர.தண்டபாணிதலைமை வகித்தார். சங்கத் தலைவர் டி.ஞானசேகரன், நிர்வாக பணியாளர்கள் சங்க பொதுச் செயலர் எம்.மணி, சிஐடியு மாநில இணைச் செயலர் ஆர்.மூர்த்தி,  எம்எல்எஃப் பொதுச் செயலர் எஸ்.மனோகரன், ஓய்வு பெற்றோர் சங்கச் செயலர் ஏ.சகாதேவன், ஐஎன்டியூசி பொதுச் செயலர் முருகானந்தம், எம்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 14-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை 1.9.2019 அன்று முதல் அமல்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி வரும் சேமநல நடத்துநர், ஓட்டுநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப் பலன்களை முழுமையாக உடனடியாக வழங்க வேண்டும். 240 நாள்கள் பணி முடித்த தொழிலாளர்களை நிபந்தனையின்றி நிரந்தரம்  செய்ய வேண்டும். 
போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்கும் இடையேயான இழப்பீட்டுத் தொகையை அரசே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். தொமுச பொருளாளர் பி.ஜான்போஸ்கோ நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT