விழுப்புரம்

செஞ்சி கோதண்டராமர் கோயிலில் ஸ்ரீராம பஜனை

DIN


செஞ்சி சங்கராபரணி நதிக்கரையின் மேல் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயிலில் ஸ்ரீநரசிம்மப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், ஸ்ரீராம பஜனையும் சனிக்கிழமை நடைபெற்றன.
எம்.ராமமூர்த்தி, திருமால் வணக்கத்துடன் பஜனையைத் தொடக்கிவைத்தார். ஸ்ரீகோதண்டராமர் அறக்கட்டளை நிர்வாகி துரை.பாரதிராஜா முன்னிலை வகித்தார். ஞானல்மேடு வி.ஜெயராமதேசிகர் தலைமை வகித்தார். கொங்கரப்பட்டு ஜனார்த்தன தேசிகர் தலைமையுரையாற்றினார். 
எட்டியாப்பிள்ளை, சாமிக்கண்ணு, பெருமாள், அருணகிரி, அப்புபிள்ளை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  நடுப்பட்டு சன்மார்க்க வில்லுப்பாட்டுக் கலைஞர் ப.புருஷோத்தமன் தலைமையில், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பஜனைக் குழுவினர் கலந்துகொண்டு பஜனை பாடினர்.
செஞ்சி பி.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் திருமஞ்சன பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கினர். விழாவில், ஷகிலா ஆண்டாள், ஸ்ரீராமுலு, நிலவளம் கதிரவன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
ஏற்பாடுகளை ஸ்ரீராம ஆஞ்சநேயா பக்த ஜன சபா மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT