விழுப்புரம்

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போலீஸார் விழிப்புணர்வு

DIN


கள்ளக்குறிச்சி, ஜூன் 12: ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல் நிலைய முன் பகுதியில் காவல் ஆய்வாளர் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மது போதையிலோ, செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டோ, அதிக நபர்களை ஏற்றிக் கொண்டோ, அதிவேகத்திலோ ஆட்டோக்களை ஓட்டக் கூடாது. 
ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஆட்டோக்களை ஓட்ட வேண்டும். ஆட்டோ ஓட்டும் போது, சீருடையில்  ஓட்டுநரின் பெயர் கொண்ட பேட்ஜ் அணிந்திருக்க வேண்டும். பயணிகளை சாலை ஓரமாக ஆட்டோவை நிறுத்தி இறக்கி விடவேண்டும்.  சந்தேகப்படும் நபர்கள் ஆட்டோவில் பயணம் செய்தாலோ, பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தாலோ அதுகுறித்து காவல் நிலையத்துக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
காவல் உதவி ஆய்வாளர் 
பாலமுரளி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT