விழுப்புரம்

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி முதலாமாண்டு தொடக்க விழா

DIN

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கான வகுப்பு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
 கல்லூரியின் முதல்வர் ஏ. அருணாகுமாரி வரவேற்றார். கல்லூரியின் தாளாளர் ஏ.சாமிக்கண்ணு தலைமை வகித்தார். செயலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் எ .செல்வி, புல முதன்மையர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
 பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், பெற்றோர், ஆசிரியர்களை மதித்தல், புத்தக வாசிப்பை மேம்படுத்துதல், மண்வளம் பாதுகாத்தல், நெகிழிகளைத் தவிர்த்தல், தூய்மைத் தொழிலாளர்களைப் போற்றுதல், நல்லொழுக்கத்தால் வாழ்வில் மேன்மையடைதல், மாணவிகளின் நோக்கம், லட்சியம், கல்விப் பயிற்சி, இலக்கில் தெளிவு, முன்னேற்றம், தயக்கமின்றி செயல்படுதல், பெண்ணின் பெருமை, மனதிடத்தின் தேவை, ஆசிரியர் பணியின் சிறப்புகள், குறைகளைக் கடந்து நிறைகளைப் பாராட்டுதல் ஆகிய கருத்துகளை விரிவாக எடுத்துரைத்தார்.
 விழாவில் ஆசிரியர்கள், முதலாமாண்டு மாணவிகள் கலந்துகொண்டனர். பேராசிரியர் செல்வக்குமார் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT