விழுப்புரம்

சிறுகடம்பூரில் தேரோட்டம்

செஞ்சி சிறுகடம்பூர் வடக்கு பார்த்த அம்மன் (எ) ஸ்ரீரேணுகாபரமேஸ்வரி கோயில் பிரம்மோத்ஸவத்தை

DIN

செஞ்சி சிறுகடம்பூர் வடக்கு பார்த்த அம்மன் (எ) ஸ்ரீரேணுகாபரமேஸ்வரி கோயில் பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு, திருத்தேர் வடம் பிடித்தல் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
கடந்த 9-ஆம் தேதி முதல் நாள் காலை 6 மணிக்கு கொடியேற்றுதலும், இரவு 7 மணிக்கு கரக புறப்பாடு நடைபெற்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடை
பெற்றது. 
10-ஆம் தேதி அம்மனுக்கு கூழ் வார்த்தலும், இரவு அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. 
17-ஆம் தேதி 9-ஆம் நாள் அன்று காலை 7 மணிக்கு சக்திகரகம் மாரியம்மன்கோயில் குளக்கரையில் இருந்து புறப்பாடு நடைபெற்றது. பகல் 12 மணிக்கு தீமிதித்தலும், மகா அபிஷேகமும் நடைபெற்றன. 
பின்னர், மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ரேணுகையம்மன், மாரியம்மன், பரசுராமர் ஆகியோர் எழுந்தருளி காட்சி தந்தனர். பின்னர், திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடை
பெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை சிறுகடம்பூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT