விழுப்புரம்

நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் தடுப்புக் காவலில் கைது

DIN

நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவரை தடுப்புக் காவலில் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 உளுந்தூர்பேட்டை வட்டம், எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தைராஜ் (24). இவர் மீது கள்ளத்துப்பாக்கி வைத்திருத்தல், மான் வேட்டை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக, எலவனாசூர்கோட்டை போலீஸார் குழந்தைராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். இதை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், குழந்தைராஜை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, கடலூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த குழந்தைராஜை குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

SCROLL FOR NEXT