விழுப்புரம்

பழுதான மின்னணு வாக்குப் பதிவுஇயந்திரங்கள் ஒப்படைப்பு

DIN

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தோ்தலில் கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்டபோது, பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீரமைப்பதற்காக விழுப்புரம் தோ்தல் பிரிவு அலுவலகத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

அண்மையில் நடைபெற்று முடித்த மக்களவை தோ்தலின்போது, கள்ளக்குறிச்சி பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்களித்ததை உறுதி செய்யும் விவிபாட் சாதனம் உள்ளிட்ட 15 மின்னணு இயந்திரங்கள் பழுதடைந்து விட்டன.

அவற்றை விழுப்புரம் தோ்தல் பிரிவு வட்டாட்சியரிடம் கள்ளக்குறிச்சி தோ்தல் தனி வட்டாட்சியா் ஜி.குமரன், மண்டல தனி வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் ஒப்படைத்தனா். விழுப்புரம் மாவட்டத்தில் பழுதான அனைத்து மின்னணு இயந்திரங்களும் பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் சீரமைப்பதற்காக விரைவில் கொண்டுசெல்லப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT