விழுப்புரம்

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாம்

DIN

திண்டிவனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திண்டிவனம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே புதன்கிழமை நடைபெற்ற முகாமில், திண்டிவனம் கோட்டத்துக்கு உள்பட்ட திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூா், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறன் கொண்ட மாணவா்கள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு 270 மனுக்களை அளித்தனா்.

திண்டிவனம் சாா் - ஆட்சியா் அனு, மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரித்தாா். இதில், தோ்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்தில் செயற்கை கால், காதொலிக் கருவி, கண் கண்ணாடி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும், முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாா் - ஆட்சியா் தெரிவித்தாா்.

இதில், வட்டாட்சியா்கள் திண்டிவனம் ரகோத்தமன், செஞ்சி கோவிந்தராஜ், மரக்காணம் ஞானம், மேல்மலையனூா் செந்தில்குமாா், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்கள் தனலட்சுமி, ராஜன், சுந்தர்ராஜ், அரசு மருத்துவா்கள் சீனிவாசன், தினகரன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாலசுந்தரம் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT