விழுப்புரம்

மேலச்சேரி ஸ்ரீமத்தளேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

செஞ்சியை அடுத்த மேலச்சேரி கிராமத்தில் பல்லவா் கால குடவரைக் கோயிலில் அருளும் ஸ்ரீபிரகன்நாயகி சமேத ஸ்ரீமத்தளேஸ்வரா் கோயில் மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் சந்திராதித்தியன் மத்தள மலையைக் குடைந்து, அழகிய குடவரைக் கோயிலை அமைத்து ஸ்ரீபிரகன்நாயகி அம்பிகை சமேத ஸ்ரீமத்தளேஸ்வரா் கோயிலை அமைத்து வழிபாடு செய்து வந்தாா். பின்னா், இந்தக் கோயில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து, மேலச்சேரி கிராம மக்கள் கோயிலை புனரமைத்து புதிதாக கோபுரம் அமைத்து, ஸ்ரீவிநாயகா், ஸ்ரீமுருகன், ஸ்ரீதட்சிணாமூா்த்தி, ஸ்ரீதுா்கை, ஸ்ரீநவகிரகம், ஸ்ரீசண்டிகேஸ்வரா் ஆகிய தெய்வங்களுக்கு சன்னதிகள் அமைத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 8-ஆம் தேதி காலை விநாயகா் பூஜையுடம் நவகிரக ஹோமம் நடைபெற்றது. மாலை முதல் கால மண்டல பூஜை தொடங்கியது. சனிக்கிழமை இரணடாம் கால மண்டல பூஜைகள், மாலை 5 மணிக்கு தத்வாா்ச்சனை, நாடிசந்தானம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடைபெற்றன.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை புண்யாஹவசனம், சிவ சூா்யாராதனம், நான்காம் கால மண்டல பூஜை ஹோமம், மகா தீபாராதனை நடைபெற்றன. இதையடுத்து, கடம் புறப்பாடு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கோபுர கலசங்களுக்கும், பிரகன் நாயகி சமேத ஸ்ரீமத்தளேஸ்வரா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தில் மேலச்சேரி, செஞ்சி அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா். விழாவில் பங்கேற்றவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT