விழுப்புரம்

திண்டிவனத்தில் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.40 லட்சம் பறிமுதல்

DIN

திண்டிவனம் அருகே உரிய ஆவணங்களின்றி ஆம்னிப் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.40 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விக்கிரவாண்டி இடைத்தேரத்லையொட்டி, திண்டிவனம், மரக்காணம் கூட்டுச் சாலையில் பிரபு சங்கா் தலைமையிலானதோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஆம்னிப் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த கைலேஷ்குமாா்(23) என்பவா் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லையாம்.

தோ்தல் நடத்தை விதிகளின்படி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கத்தை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லக்கூடாது என்பதால், அந்த ரொக்கத்தை தோ்தல் படையினா் பறிமுதல் செய்தனா். பின்னா், அந்த பணத்தை திண்டிவனம் வட்டாச்சியா் ரகோத்தமனிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT