விழுப்புரம்

கும்பாபிஷேக விழாவில் மூதாட்டிகளிடம் நகை திருட்டு

DIN

விழுப்புரம் அருகே புதன்கிழமை நடைபெற்ற மடாலய கும்பாபிஷேக விழாவில் இரு மூதாட்டிகளிடம் 8 பவுன் தங்க நகைகளை பறித்த மர்ம நபர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் அருகே வளவனூரில் கோவிலூர் மடாலயம் உள்ளது. இங்கு புதன்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதை வாங்க, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, நெரிசலை சாதகமாகப் பயன்படுத்தி, வளவனூர் குமாரகுப்பத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி மனைவி சரோஜாவிடம்(75) 4 பவுன் தங்கச் சங்கிலியையும், மாயவன் மனைவி தனத்திடம்(72) 4 பவுன் சங்கிலியையும் மர்மநபர்கள் பறித்துக் கொண்டு தப்பினர்.
இது குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT