விழுப்புரம்

செஞ்சியில் அதிசயம்! விழுதுகள் இல்லாத ஆலமரம்!

செஞ்சி அருகே தீவனூர் பொய்யாமொழி விநாயகர்   கோயிலில் உள்ள ஆலமரத்தில் விழுதுகளே இல்லை.

DIN

செஞ்சி அருகே தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோயிலில் உள்ள ஆலமரத்தில் விழுதுகளே இல்லை!

செஞ்சி - திண்டிவனம் சாலையில் அமைந்துள்ளது பொய்யாமொழி விநாயகர் கோயில். இங்கு மூலவரான விநாயகர் சுயம்புவாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

பிரசித்தி பெற்ற இந்தக் கோயில் சுற்றுப் பிரகாரத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலமரம் உள்ளது. 

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆலமரத்தைச் சுற்றி வந்து, மஞ்சள் கயிற்றில் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர்.

ஆச்சரியமளிக்கும் விதமாக இந்த ஆலமரத்தில் இதுவரை விழுதுகளே இல்லாமல் உள்ளதுதான் இதன் முக்கிய சிறப்பம்சமாகும். பக்தர்கள் அனைவரும் இந்த அதிசய ஆலமரத்தையும் வழிபட்டுச் செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT