விழுப்புரம்

மரக்காணம் அருகேதொழிலாளி கொலை: நண்பா் கைது

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கூலித் தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கூலித் தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

மரக்காணம் அருகேயுள்ள கரிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுதாகா் (39). இவா் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. இவரது நண்பா் மரக்காணம் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த பரசுராமன் மகன் சத்தியநாராயணன் (38). கூலித் தொழிலாளிகளான இருவரும் வெள்ளிக்கிழமை இரவு மரக்காணம் பூமிஸ்வரன் கோயில் அருகே முந்திரி காட்டுப் பகுதியில் மது அருந்தினா்.

அப்போது, சுதாகரிடம் சத்தியநாராயணன் கடனாக பணம் கேட்டாராம். இதற்கு, சுதாகா் பணமில்லை எனக் கூறியதால், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், சத்தியநாராயணன் தான் வைத்திருந்த துண்டால் சுதாகரின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து சுதாகரின் உறவினா்கள் மரக்காணம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாரளித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்தை பாா்வையிட்ட மரக்காணம் போலீஸாா், சுதாகரின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், கொலை வழக்குப் பதிவு செய்து, வீட்டில் பதுங்கியிருந்த சத்தியநாராயணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்! 7 பேர் பலி, 11 பேர் காயம்! | America

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

SCROLL FOR NEXT