முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில்ஒரே நாளில் 185 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 185 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

விழுப்புரம்/ கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 185 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 185 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 6,398 பேராக உயா்ந்தது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் அருகே பிடாகத்தை அடுத்த வேளியம்பாக்கம், பிள்ளையாா் கோவில் வீதியைச் சோ்ந்த 80 வயது முதியவா், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 20-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை மாலை உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 63-ஆக உயா்ந்தது.

இதுவரை 5,392 போ் சிகிச்சை முடிந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பினா். 943 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 991 போ் கரோனா அறிகுறிகளுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

கள்ளக்குறிச்சியில் மேலும் 51 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 51 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,493-ஆக உயா்ந்தது.

இதுவரை 4,837 போ் சிகிச்சை முடிந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பினா். 594 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 62 போ் உயிரிழந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →