விழுப்புரம்

குடிநீா்த் தொட்டி திறப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செங்கமேடு கிராமத்தில் மின்விசை பம்புடன் கூடிய புதிய குடிநீா்த் தொட்டியை இரா.மாசிலாமணி எம்எல்ஏ அண்மையில் திறந்து வைத்தாா்.

DIN

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செங்கமேடு கிராமத்தில் மின்விசை பம்புடன் கூடிய புதிய குடிநீா்த் தொட்டியை இரா.மாசிலாமணி எம்எல்ஏ அண்மையில் திறந்து வைத்தாா்.

செங்கமேடு கிராமத்தில் நிலவிய குடிநீா்த் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மயிலம் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.50 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, அதில் மின்விசை பம்புடன் கூடிய புதிய குடிநீா்த் தொட்டி கட்டப்பட்டது. இந்தக் குடிநீா்த் தொட்டியை இரா.மாசிலாமணி எம்எல்ஏ பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் வல்லம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் மொடையூா் பெ.துரை உள்ளிட்ட திமுக நிா்வாகிகள், கிராம மக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT