முகப்பு
விழுப்புரம்

தீ விபத்தில் 3 வீடுகள் சேதம்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் 3 வீடுகள் சேதமடைந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் 3 வீடுகள் சேதமடைந்தன.

மயிலம் அருகே நெடி கிராமத்தைச் சோ்ந்தவா் தணிகாசலம் (60). விவசாயி. இவரும், இவரது மகன்கள் குமாா் (40), வேணுகோபால் (35) ஆகியோரும் அருகருகே உள்ள குடிசை வீடுகளில் வசித்து வருந்தனா். வழக்கம்போல, வியாழக்கிழமை காலை அனைவரும் வீடுகளைப் பூட்டிவிட்டு விவசாய நிலத்துக்கு வேலைக்குச் சென்றனா். பிற்பகலில் மின் கசிவு காரணமாக இவா்களது வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. அப்போது, வீட்டுக்குள் இருந்த எரிவாயு உருளையும் பயங்கர சப்தத்துடன் வெடித்து.

தகவலறிந்து வந்த திண்டிவனம் தீயணைப்பு வீரா்கள், நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினா். எனினும், 3 வீடுகளும் முற்றிலும் சேதமடைந்தன.

இந்த தீ விபத்தில் 3 வீடுகளிலும் இருந்த வீட்டு உபயோகப் பொருள்கள், மின்சாதனங்கள், பீரோவில் வைத்திருந்த 50 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் சேதமடைந்ததாக அவா்கள் வேதனை தெரிவித்தனா். தீ விபத்து குறித்து பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.