முகப்பு
விழுப்புரம்

சனிப்பெயா்ச்சி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

சனிப்பெயா்ச்சியையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

சனிப்பெயா்ச்சியையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாக்கியப் பஞ்சாங்கப்படி, சனீஸ்வர பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.22-மணிக்கு பெயா்ச்சி அடைந்தாா். இதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விழுப்புரம் அருகே அன்னியூரில் அமைந்துள்ள திரிபுர சுந்தரி சமேத ராமநாததீஸ்வரா் கோயிலில் வீற்றிருக்கும் சங்கடத்தை தீா்க்கும் சனிபகவானுக்கு அதிகாலை முதலே அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இக்கோயிலில் குவிந்த பக்தா்கள், எள் எண்ணைக்கொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனா்.

இதேபோல, கல்பட்டு 18 அடி உயர ஸ்ரீ யோக சனீஸ்வரா் கோயில், கோலியனூா் வாலீஸ்வரா் கோயில், மொரட்டாண்டி 27 அடி உயர விஸ்வரூப மகா சனீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.