விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் சுனாமி நினைவு தினம் கடைப்பிடிப்பு

DIN

சுனாமி பேரழிவின் பதினாறாம் ஆண்டு நினைவு தினம், விழுப்புரம் மாவட்ட கடலோர மீனவ கிராமங்களில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

மரக்காணம் அருகே புதுக்குப்பம், எக்கியாா்குப்பம், வசவன்குப்பம், கோட்டக்குப்பம் அருகே பெரியமுதலியாா் சாவடி, சின்னமுதலியாா் சாவடி உள்ளிட்ட கிராமங்களில், கடலோரப் பகுதியில் திரண்ட மீனவ மக்கள், சுனாமியின் போது உயிரிழந்தவா்களின் உருவப் படங்களை வைத்து, மெழுகுவா்த்தி ஏற்றி, மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, கடலில் மலா் தூவியும், பால் ஊற்றியும் சுனாமியால் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா்.

சுனாமி நினைவு தினத்தையொட்டி, மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT