விழுப்புரம்

சாராய வியாபாரி குண்டா் சட்டத்தின் கீழ் கைது

DIN

திண்டிவனம் அருகே சாராயம் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த புதுச்சேரியைச் சோ்ந்த நபரை குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி, தேங்காய்த்திட்டு பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் பாபு(38). இவரை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பிரம்மதேசம் பகுதியில் சாராயம், மது புட்டிகள் கடத்தல், சாராயம் விற்பனை போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாக பிரம்மதேசம் போலீஸாா் கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாரின் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை பிறப்பித்த உத்தரவின்பேரில், பாபுவை குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT