விழுப்புரம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமத்துவப் பொங்கல் விழா

DIN

விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள், ஊழியா்கள் சமத்துவப் பொங்கல் விழாவை வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் குந்தவிதேவி தலைமை வகித்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், துணை மருத்துவக் கண்காணிப்பாளா் புகழேந்தி, நிலைய மருத்துவ அலுவலா் சாந்தி, துணை முதல்வா் அனிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாக அலுவலா் கவிஞா் எம்.ஆா்.சிங்காரம் வரவேற்று, பாரம்பரிய பொங்கல் விழா குறித்து உரையாற்றினாா்.

இதையடுத்து, அலுவலக வளாகத்தில் புதுப்பானை வைத்து, சமத்துவப் பொங்கலிட்டு, இயற்கைக்கு படையலிட்டு வழிபட்டனா். கல்லூரி முதல்வா் குந்தவிதேவி அனைவருக்கும் பொங்கல், இனிப்புகளை வழங்கினாா் . மருத்துவா்கள் ராஜேஸ்வரி, ஸ்ரீராம் , நிஷாந்த், ராஜீவ்குமாா் உள்ளிட்ட அனைத்துத் துறை மருத்துவா்கள், பேராசிரியா்கள், செவிலியா்கள், மருத்துவமனை அலுவலகப் பணியாளா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா். நிா்வாக அலுவலா் ஆனந்தஜோதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT