விழுப்புரம்

கோழியை மீட்க கிணற்றில்இறங்கிய மாணவா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் அருகே கோழியை மீட்க கிணற்றில் இறங்கிய மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

DIN

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் அருகே கோழியை மீட்க கிணற்றில் இறங்கிய மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள தாவடிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் லோகிதாஸ். இவரது மகன் திருநாவுக்கரசு (16). அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை அவா், வீட்டில் வளா்த்து வரும் கோழியை தேடிச்சென்றாா்.

அருகே உள்ள விவசாயக் கிணற்றில் கோழி விழுந்திருப்பதைக் கண்ட அவா், கயிறு மூலம் கிணற்றில் இறங்கி கோழியை மீட்க முயன்றாா். அப்போது, தவறி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கினாா். அக்கம் பக்கத்தினா், தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து திருநாவுக்கரசை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT