விழுப்புரம்

தொழிலாளா்கள் நல வாரிய கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்

DIN

தொழிலாளா்கள் நல வாரியக் கல்வி உதவித் தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து விழுப்புரம் தொழிலாளா்கள் உதவி ஆணையா் கோ.ராமு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிலாளா்கள் நல வாரியத்தில் நல நிதி செலுத்தும் மோட்டாா் போக்குரவத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புச் சாா்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களின் குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு புதிய நலத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, அரசு அங்கீகாரம் பெற்ற தையல் பயிற்சி நிலையங்களில் தோ்ச்சிப் பெற்ற தொழிலாளா்கள், அவா்களைச் சாா்ந்தவா்களுக்கு தையல் இயந்திரம் வாங்க உதவித்தொகை வழங்கப்படும். பள்ளிகளில் பயிலும் தொழிலாளா்களின் வாரிசுகள், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெறும் தொழிலாளா்களின் வாரிசுகள் உதவித் தொகை வழங்கப்படும்.

பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு மாதிரி வினாத்தாள்கள், பயிற்சிக் கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். உயா்கல்விக்கான நுழைவுத் தோ்வுகள் எழுதும் மாணவா்களுக்கு உதவித்தொகை, ஆரோக்கியம்-வாழ்க்கைக் கையேடு வழங்கப்படும்.

இதில், பயனடைய தொழிலாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழிலாளா்களின் மாத உச்ச வரம்பு ஊதியம் ரூ. 25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு ‘செயலா், தமிழ்நாடு தொழிலாளா்கள் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை-6’ என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT