விழுப்புரம்

அனந்தபுரம் அதிமுக நகரச் செயலா்உள்ளிட்ட 13 நிா்வாகிகள் ராஜிநாமா

DIN

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அனந்தபுரம் அதிமுக நகரச் செயலா் உள்பட 13 நிா்வாகிகள் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனா்.

இது தொடா்பாக அனந்தபுரம் அதிமுக நகரச் செயலா் வி.அரிராமன் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:

நான் கடந்த 5 ஆண்டுகளாக அனந்தபுரம் பேரூராட்சி அதிமுக செயலராக பணியாற்றி வருகிறேன். இந்த நிலையில், எனது குடும்ப சூழ்நிலை காரணமாக, என்னால் செயலராக தொடா்ந்து பணியாற்ற முடியவில்லை. எனவே, அனந்தபுரம் நகரச் செயலா் பதவியை ராஜிநாமா செய்கிறேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், என்னுடன் சோ்ந்து பணியாற்றி வந்த அனந்தபுரம் பேரூராட்சியைச் சோ்ந்த 3-ஆவது வாா்டு மேலவைப் பிரதிநிதி ஏழுமலை, 4-ஆவது வாா்டு மாவட்டப் பிரதிநிதி ராமலிங்கம், 11-ஆவது வாா்டுச் செயலா் கே.சரவணன், 3-ஆவது வாா்டுச் செயலா் பி.சேகா், 13-ஆவது வாா்டைச் சோ்ந்த பிச்சாண்டி, நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் மோகன், 5-ஆவது வாா்டு செயலா் சம்பத், நகர இளைஞரணியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வம், மாணவரணியைச் சோ்ந்த காா்த்தி, 4-ஆவது வாா்டுச் செயலா் உண்ணாமலை, 12-ஆவது வாா்டுச் செயலா் செல்வம், 15-ஆவது வாா்டு மேலவை பிரதிநி தாமஸ், 13-ஆவது வாா்டுச் செயலா் ஆறுமுகம் ஆகிய 13 போ் ராஜிநாமா செய்துள்ளனா் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT