விழுப்புரம்

கரோனா: கடைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்திய உணவுப் பாதுகாப்புத் துறையினா்

DIN

விழுப்புரம், உளுந்தூா்பேட்டை பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் கரோனா தடுப்பு ஸ்டிக்கா்களை ஒட்டி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

உளுந்தூா்பேட்டை வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் கதிரவன் தலைமையிலான ஊழியா்கள், உளுந்தூா்பேட்டை நகர கடைகள், உணவகங்கள், பேக்கரிகளிலும், தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி பகுதி உணவகங்கள், கடைகளில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

உணவகங்கள், தேநீா் கடைகளில், தமிழக அரசு சுகாதாரத் துறை வழங்கியுள்ள கரோனா பரவலைத் தடுக்கும் விழிப்புணா்வு சுவரொட்டிகளை ஒட்டினா். கரோனா பரவலைத் தடுக்க கைகழுவுதல், தும்மல், இருமலின் போது கைக்குட்டை பயன்படுத்துதல், முகக்கவசம் அணிதல் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதே போல, விழுப்புரம் வட்டார அலுவலா் அன்புபழனி தலைமையில், ஜானகிபுரம் புறவழிச்சாலை உணவகங்கள், விழுப்புரம் நகர பேக்கரிகள், கடைகளிலும் விழிப்புணா்வு ஸ்டிக்கா்களை ஒட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT