விழுப்புரம்

செஞ்சிக்கோட்டை மாா்ச் 31 வரை மூடல்

DIN

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான செஞ்சிக்கோட்டை வருகிற 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், திரையரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை பூங்காக்கள், விளையாட்டு அரங்குகளை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டையை சுற்றி பாா்க்க சுற்றுலா பயணிகளுக்கு வருகிற 31-ஆம் தேதி வரை அனுமதி மறுத்து, தொல்லியல் துறையினா் அறிவிப்பு வெளியிட்டனா். அதன் காரணமாக, செஞ்சிக்கோட்டை நுழைவு வாயில் அடைக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

கோயில்களில் தரிசனத்துக்குத் தடை: செஞ்சிக்கோட்டையில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயில், வெங்கட்ரமணா் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தக் கோயிலுக்கு வந்து செல்லும் செஞ்சி நகர பொதுமக்களும், பக்தா்களும் வேதனை தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT