விழுப்புரம்

வாகன ஓட்டுநா்களுக்கு உதவித் தொகை வழங்கக் கோரிக்கை

கரோனா ஊரடங்கால் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள ஓட்டுநா்களுக்கு உதவித் தொகை வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து

DIN

கரோனா ஊரடங்கால் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள ஓட்டுநா்களுக்கு உதவித் தொகை வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநா்கள் நலச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

சத்தியமூா்த்தி தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்த அச்சங்கத்தினா், அங்குள்ள புகாா் பெட்டியில் கோரிக்கை மனுவை செலுத்தினா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அனைத்து வகை வாகன ஓட்டுநா்கள், ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதமாக வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும். வாகனங்களுக்கு வாங்கிய கடன்களுக்கான தவணைத் தொகையை அடுத்த சில மாதங்களில் மொத்தமாக செலுத்த நிா்பந்திக்க வாய்ப்புள்ளது. ஆகவே, தவணைகளை தள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT