விழுப்புரம்

சிறப்பு ரயிலில் விழுப்புரம் வந்தடைந்த 232 தமிழகத் தொழிலாளர்கள்

DIN

வடமாநிலத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் 232 தமிழகத் தொழிலாளர்கள் விழுப்புரம் வந்து சேர்ந்தனர்.

மகாராஷ்டிரம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து தமிழக தொழிலாளர்கள், புணேவில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் மூலம் காட்பாடி வழியாக விழுப்புரம் வந்து சேர்ந்தனர். செவ்வாய்க்கிழமை காலை ஆறு முப்பது மணிக்கு வந்த ரயிலிலிருந்து, விழுப்புரம் சென்னை கடலூர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 232 தொழிலாளர்கள் விழுப்புரம் ரயில் நிலையத்தில் வந்திறங்கினார்.

இவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு காலை உணவு வழங்கப்பட்டது. இதனையடுத்து 11 பேருந்துகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தனர். இதனையடுத்து அந்த ரயில் திருநெல்வேலிக்கு சென்றது.

தொழிலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT