விழுப்புரம்

அமைச்சர் காமராஜ் தெரிவித்த புகாரை நிரூபித்தால் அரசியலைவிட்டே விலகத் தயார்: பொன்முடி

DIN

திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டம் தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்த புகாரை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி சவால்விடுத்தார்.

விழுப்புரம் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த இதயதுல்லா என்பவர், திமுக அறிவித்த உதவி எண்ணில் தொடர்ப்புகொண்டதாகவும், ஆனால் எந்தவித உதவியும் செய்யவில்லை என தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான பேட்டி ஒன்றை மேற்கோள்காட்டி, உணத்துறை அமைச்சர் காமராஜ் திமுக மீது குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் காமராஜ் மேற்கொள்காட்டி பேசிய நபர் இதயதுல்லா என்பவரின் உண்மையான பெயர் சபரி என்றும், இவரின் அண்ணன் அதிமுகவின் விழுப்புரம் நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர், இதயதுல்லா என்ற பெயரில் போலியாக பேட்டி கொடுத்திருப்பதாகவும், இந்த பேட்டி கூட்டுறவு துறையின் மூலம் எடுக்கப்பட்டதா, இல்லை யார் எடுத்தது என்பது குறித்து விசாரனை நடத்த வேண்டும். 

பேட்டி கொடுத்த நபர்  போலியான அவர் என்பதை நான் நிரூபிக்க தயார். நிரூபிக்க தவறினால் அரசியலைவிட்டே விலகி விடுகிறேன். நிரூபித்துவிட்டால் அமைச்சர் காமராஜ் அரசியலைவிட்டே விலகத் தயாரா என சவால் விடுத்தார். இதனை தொடர்ந்து ஆள்மாறாட்டம் செய்து போலியான பெயரில் பேட்டியளித்த சபரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்கானிப்பாளார் ஜெயக்குமாரிடம் புகார் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT