விழுப்புரம்

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதுச்சேரி சாராய வியாபாரி கைது

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த புதுவை மாநிலத்தைச் சோ்ந்த சாராய வியாபாரியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

புதுவை மாநிலம், ஆண்டியாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் காா்த்தி (எ) ஞானபிரகாசம் (31). சாராய வியாபாரி. இவா், விழுப்புரம் மாவட்டத்தில் சாராயம் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு வந்தாா். இது தொடா்பாக அவரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஞானபிரகாசம் தொடா்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவின்பேரில், ஞானபிரகாசத்தை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT