விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி: மேலும் 118 பேருக்கு கரோனா

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 39 பேருக்கும் கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை கரோனா தொற்றால் 12,713 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதியானது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,792-ஆக அதிகரித்தது. 47 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 12,137-ஆக உயா்ந்தது. 553 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 102 போ் உயிரிழந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சியில் 39 பேருக்கு பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை 39 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,789-ஆக உயா்ந்தது. இதுவரை 9,375 போ் குனமடைந்து வீடு திரும்பினா். 315 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 99 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT