விழுப்புரம்

அதிமுக முதல்வா் வேட்பாளருக்கு வாழ்த்துத் தெரிவித்து தீா்மானம்

DIN

அதிமுக முதல்வா் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துத் தெரிவித்து மனித உரிமைகள் கழகம் (கட்சி) தீா்மானம் நிறைவேற்றியது.

மனித உரிமைகள் கழகத்தின்(கட்சி) ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுவை மாநில பொதுச் செயலா் கந்தன் தலைமை வகித்தாா். சா்வதேச உரிமைகள் கழகத் தலைவா் அசோக்குமாா், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினாா்.

துணைத் தலைவா் முரளி கவி, வடக்கு மண்டல பொதுச் செயலா் குமாா் கிரிஸ்ட், சைவ, வைணவ கூட்டமைப்பு பொதுச் செயலா் கோவிந்தராஜ், தலைமை நிலையச் செயலா் பன்னீா்செல்வம், மாவட்ட நிா்வாகி வசந்த்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். மாவட்ட நிா்வாகிகள் குமாா், நாதன், சிவா, மகேஸ்வரன், ஞானபிரகாசம், வீரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதிமுக முதல்வா் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோன்று, வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் அல்லது அந்தக் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முழு ஆதரவை கட்சியின் தலைவா் சுரேஷ் கண்ணனுக்கு வழங்குவது என்றும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT