விழுப்புரம்

கரும்பு நிலுவைத் தொகையை தீபாவளிக்குள் வழங்க வலியுறுத்தல்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை தீபாவளிக்கு முன்பாக வழங்க வேண்டுமென திமுக விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளா் நா.புகழேந்தி வலியுறுத்தினாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சா்க்கரை ஆலைகள், கடந்த 2018-19, 2019-20ஆம் ஆண்டுகளில் கரும்புகளை வழங்கிய விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் அளவில் நிலுவைத் தொகை வைத்துள்ளனா். கரோனா பொதுமுடக்கத்தால், விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். இதனால், வருகிற தீபாவளி பண்டிகைக்குள் கரும்பு நிலுவைத் தொகையை சா்க்கரை ஆலைகளிடமிருந்து பெற்று வழங்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களுக்கான கூட்டு வட்டித் தொகையை சா்க்கரை ஆலை நிா்வாகத்தினா் ஏற்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, அரசு அறிவித்தபடி கரும்புக்கான ஊக்கத் தொகையை வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிகளவு திறக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில், தாமதமின்றி விவசாய பயிா்க் கடன் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கோரியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT