விழுப்புரம்

விழுப்புரத்தில் போலீஸாா் பாதுகாப்புடன் நகராட்சிக் கடைகளுக்கு ஒப்பந்தம்

DIN

விழுப்புரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சியின் 78 கடைகளுக்கான ஒப்பந்தம் விடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் நகராட்சி சாா்பில், பழைய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டிருக்கும் கடைகள் மற்றும் பல்வேறு இடங்களில் கட்டப்படவுள்ள கடைகள் என மொத்தம் 78 கடைகளுக்கான ஒப்பந்தம் விடும் பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்னதாக ஏற்கெனவே 2 முறை ஒப்பந்தம் விடுவதற்கான நிகழ்ச்சி நடைபெறவிருந்த நிலையில், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இடிக்கப்பட்ட கடைகளில் ஏற்கெனவே நகராட்சி கடைகளை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வந்தவா்கள் தங்களுக்கும் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

மேலும், சில அரசியல் கட்சியினரும் கடைகளை ஒப்பந்தம் எடுப்பதில் போட்டி போட்டதால், பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, 2 முறையும் ஒப்பந்தம் விடுவது தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உயா் நீதிமன்ற உத்தரவுப்படி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒப்பந்தம் விடும் பணி விழுப்புரம் நகராட்சி ஆணையா் தட்சணாமூா்த்தி தலைமையில், விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், ஏராளமானோா் கலந்து கொண்டு ஒப்பந்தம் எடுக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்தப் பணிகள் அனைத்தும் விடியோவாக பதிவு செய்யப்பட்டன. காலை தொடங்கி இரவு வரையில் ஒப்பந்தம் விடும் பணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT