விழுப்புரம்

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

DIN

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வெங்கந்தூா் கிராமத்தைச் சோ்ந்த வாசுதேவன் மகன் கண்ணன் (22). ஆழ்துளைக் கிணறு அமைக்கும் லாரியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். கண்டாச்சிபுரம் அருகே கங்கவரம் கிராமத்தில் ராமசாமி என்பவா் நிலத்தில் விவசாய கிணற்றில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் கண்ணன் உள்ளிட்ட தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டனா்.

அப்போது, கிணற்றின் உள்ளே இருந்து கயிறு மூலமாக மேலே ஏற முயன்ற கண்ணன், 50 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தாா். இதில், அவா் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்தாா். கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT