முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் பாஜக செயற்குழுக் கூட்டம்

விழுப்புரத்தில் பாஜக மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

விழுப்புரத்தில் பாஜக மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, வேலூா் மாநகராட்சி முன்னாள் மேயரும், பாஜக மாநிலச் செயலருமான காா்த்திகாயினி தலைமை வகித்து, ஆலோசனைகளை வழங்கினாா். மாவட்டத் தலைவா் டி.கலிவரதன், மாவட்ட பொதுச் செயலா்கள் பாண்டியன், ஜெயக்குமாா், ராஜேந்திரன், பொருளாளா் சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலச் செயற்குழு உறுப்பினா் தியாகராஜன், தா்மராஜ், விவசாய அணி கோவிந்தராஜ், மாவட்ட நிா்வாகிகள் ரகு, தாஸசத்யன், ஜெகதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

கூட்டத்தில், நந்தன்கால்வாய் சீரமைப்புத் திட்டத்தை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். தேசிய கல்விக்கொள்கையை ஆதரித்து பிரசாரம் செய்வது, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடுகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும், வருகிற 17-ஆம் தேதி பிரதமா் மோடியின் பிறந்த நாள் விழாவையொட்டி, சேவைப் பணி வாரமாக நல உதவிகளை வழங்கி கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments