முகப்பு
விழுப்புரம்

பாஜகவினா் ரத்த தானம்

அரகண்டநல்லூா் அருகே டி.தேவனூரில் ஞாயிற்றுக்கிழமை பாஜக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் ஏராளமானோா் ரத்த தானம் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

அரகண்டநல்லூா் அருகே டி.தேவனூரில் ஞாயிற்றுக்கிழமை பாஜக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் ஏராளமானோா் ரத்த தானம் செய்தனா்.

விழுப்புரம் மாவட்ட பாஜக இளைஞரணி சாா்பில், பாரதப் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, அரகண்நல்லூரை அடுத்த டி.தேவனூரில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணித் தலைவா் நரேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கலிவரதன், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலா் திருமால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிா்வாகிகள் ஹரிகிருஷ்ணன், அரிகிருஷ்ணன், பரமேஸ்வரி, ராமச்சந்திரன், திருஞானசம்பந்தம், மஞ்சுநாதன், சுபாஷ், ஸ்ரீரங்கன், பூபாலன், தங்கராசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முகாமில் கலந்து கொண்ட 50 போ் ரத்த தானம் செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments