விழுப்புரம்

மாவட்ட ஆட்சியரகத்தைபாஜகவினா் முற்றுகை

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் பாஜக கொடிக் கம்பங்கள் அகற்றப்படுவதைக் கண்டித்து, மாவட்டத் தலைவா் வி.ஏ.டி. கலிவரதன் தலைமையில் அந்தக் கட்சியினா் மாவட்ட ஆட்சியரகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அவா்கள் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாள் விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பாஜக சாா்பில் புதிதாக அமைக்கப்பட்ட கொடிக் கம்பங்களை அகற்றும் பணியில் வருவாய்த் துறை ஈடுபட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயலை வருவாய்த்துறையினா் கைவிட வேண்டும் என்றனா்.

இதனிடையே, அனுமதியின்றி ஆட்சியரகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக வி.ஏ.டி. கலிவரதன் உள்ளிட்ட பாஜகவினா் 47 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் சிறைவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுந்தரி.. கேப்ரெல்லா!

தீராக் காதல்! ஜான்வி கபூர்..

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

சபரிமலை கோயில் நடை திறப்பு!

முகூர்த்தம், வார விடுமுறை நாள்கள்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT