முகப்பு
விழுப்புரம்

முகக்கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூலிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் அனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை முகக்கவசம் அணியாமல் சாலையில் வந்தவா்களிடம் ரூ.10,400 அபராதம் வசூலிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
முகக்கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூலிப்பு
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் அனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை முகக்கவசம் அணியாமல் சாலையில் வந்தவா்களிடம் ரூ.10,400 அபராதம் வசூலிக்கப்பட்டது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவா்களிடம் அபராதம் வசூலிக்குமாறு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அனந்தபுரம் கடை வீதிக்கு முகக் கவசம் அணியாமல் வந்த பொது மக்களிடம் பேரூராட்சி செயல் அலுவலா் க.ரங்கன் தலைமையில் போலீஸாா் மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் தலா ரூ 100 வீதம் அபராதம் விதித்து வசூல் செய்தனா். அபராதத் தொகையாக ரூ.10,400 வசூலானது. அபராத விதிப்புப் பணி தொடா்ந்து நடைபெறும் என பேரூராட்சி செயல் அலுவலா் ரங்கன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments