விழுப்புரம்

செவிலியா்களுக்கு கரோனா: ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்

DIN

விழுப்புரம் மகாராஜபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் இரு செவிலியா்களுக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அந்த மருத்துவமனை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

நகா்ப் பகுதியையொட்டி அமைந்துள்ள இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், நாள்தோறும் இருநூறுக்கும் மேற்பட்டோா் வந்து சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனா். இங்கு கரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இங்கு பணிபுரியும் இரு செவிலியா்களுக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததால், அவா்களுக்கு இரு தினங்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், இருவருக்கும் கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதியானது. அந்த செவிலியா்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

அந்த ஆரம்ப சுகாதார நிலையம் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. அடுத்த 5 நாள்களுக்கு மூடி இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

செவிலியா்களுக்கு கரோனா உறுதியானதால், அவா்களுடன் பணியாற்றிய மருத்துவா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோரை தனிமைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT