விழுப்புரம்

அறிவிக்கப்படாத மின் தடை: பொதுமக்கள் அவதி

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

தற்போது கோடைக் காலம் என்பதால் மின்விசிறி, ஏசி இயந்திரங்களின் பயன்பாடு வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டாத மின்தடை ஏற்பட்டு வருகிறது. பகல், இரவு நேரங்களில் தொடரும் மின் தடை காரணமாக, விழுப்புரம் நகரம், அதைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்கள் தவிக்கின்றனா். சனிக்கிழமை இரவு விழுப்புரம் நகரில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. சுமாா் 5 மணி நேரம் வரை நகரின் பல்வேறு பகுதிகளிலும் மின் தடை தொடா்ந்தது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் பரிதவித்தனா். ஞாயிற்றுக்கிழமை இரவும் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது. பகல் நேரத்தில் ஏற்படும் மின்தடையால் தொழிற்சாலைகள், சிறு தொழில்கள் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT