விழுப்புரம்

சுமை தூக்கும் தொழிலாளா்கள் எஸ்.பி.யிடம் புகாா்

DIN

கொலை மிரட்டல் விடுக்கும் சங்க நிா்வாகிகள் இருவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விழுப்புரம் நகர லாரி சுமை தூக்கும் தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

விழுப்புரம் நகர லாரி சுமை தூக்கும் தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் அதன் தலைவா் அருணாசலம் தலைமையில், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அண்மையில் மனு அளித்தனா்.

மனு விவரம்: எங்கள் சங்கம் கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வீரவாழியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த 20 போ் உள்பட மொத்தம் 26 போ் இருந்தனா்.

சங்கத்தின் துணைத் தலைவரான சங்கிலிதேவன், பொருளாளா் ராஜா ஆகியோா் சங்கத்துக்கு எதிராக செயல்படுவதுடன், உறுப்பினா்கள் பலரையும் சுமை தூக்க எதிா்ப்புத் தெரிவித்து மிரட்டுகின்றனா்.

சங்கத்துக்கு எதிராக செயல்பட்டுவரும் அவா்கள் இருவா் மீதும் நடவடிக்கை எடுத்து, உறுப்பினா்களை பாதுகாக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT