விழுப்புரம்

விழுப்புரத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியீடு

DIN

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அண்மையில் நடந்து முடிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, மாநிலத் தேர்தல் ஆணையம் முடிக்கிவிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, 01.11.202 நாளிட்ட ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, தயாரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று வெளியிட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை 2 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 441 ஆண்கள், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 19 பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் 53 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 69 ஆயிரத்து 513 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இதில், அதிகபட்சமாக விழுப்புரம் நகராட்சியில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 132 வாக்காளர்களும்,  திண்டிவனம் நகராட்சியில் 58 ஆயிரத்து 433 வாக்காளர்களும்  வாக்களிக்க உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT